கென்னை,
அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தியது, அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை என்று கமல் டுவிட் செய்துள்ளார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலுக்கட்டாயமாக போலீசாரால் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக அமைதியான போராட்டம் வன்முறை களமாக மாறியது.
இதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தியதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 5 போலீசாரும் காயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மீனவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால், மெரினா கடற்கரை பகுதி பதற்றமாக காணப்படுகிறது.
மெரினா கடற்கரையைச் சுற்றி காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்ட உள்ளது. யாரும் அந்தப் பகுதியின் உள்ளே நுழைய அனுமதி இல்லை.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வன்முறை, தடியடி குறித்து நடிகர் கமல் ட்விட்டரில் கூறி இருப்பதாவது,
இது தவறு. அமைதியாகப் போராடும் மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் நல்ல முடிவுகளைத் தராது. அலங்காரநல்லூரை அலங்கோல மாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை என்று கூறியுள்ளார்.
ரஜினி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
போராட்டக்காரர்கள் தங்களுடைய அறவழி போராட்டத்தை முடித்துக் கொள்ளவேண்டும், தற்போது நடக்கும் சம்பவம் வேதனை அளிக்கிறது என்று ரஜினி கூறியுள்ளார்.