சென்னை,

ல்லிக்கட்டுக்கு தமிழக அரசு தற்காலிகமாக அவசர சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், போராட் டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டம் நிறைவு பெறாது என்று ஆவேசமுடன் பேசி வருகின்றனர்.

மெரினாவை நோக்கி இரவு முழுவதும் மக்கள்  திரண்டு போராட்டக்காரர்களுக்கு  ஆதரவு தெரிவித்து வந்தனர்.  இதன் காரணமாக  இரவிலும் போராட்டம் களைகட்டியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எந்தவிரத அரசியல் கட்சி யினர் ஆதரவுமின்றி பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி யுள்ளது. ஆனால், இந்த சட்டம் 6 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். ஆகவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என இளைஞர்கள் கூறி உள்ளனர்.

நேற்று சனிக்கிழமை பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் விடுமுறையாதலால் மெரினாவை நோக்கி மக்கள் படையெடுத்தனர். நேற்று இரவிலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் குவிந்தனர்.

லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களின்  போராட்டத்திற்கு ஆதரவாக மெரினாவில் கூடியுள்ளனர். நேற்று இரவு மெரினாவில் போராட்டக்காரர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் என பல லட்சம் பேர் குவிந்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை கடற்கரைசாலை, காமராஜர் சாலை கடும் போக்குவரத்தில் சிக்கி தவித்தது. இரவிலும்,  மெரினாவை  நோக்கி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், வாகனங்க ளில் வந்துகொண்டே இருந்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகல்  இரவு 11 மணிக்கு கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று  ஞாயிற்றுக்கிழமை என்பதால் போராட்டக்காரர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.