திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இருப்பதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தடை காரணமாக, இந்த முறையும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்ட தமழக மக்கள், ஆங்காங்கே தன்னிச்சையாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியும் நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. தடுக்க முயன்ற காவல் துறையினரையும் மீறி மக்கள் இரவு முழுக்க போராட்டம் நடத்தினர். இன்றுகாலை அவர்கள்கைது செய்யப்பட்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில், திருப்பூரில் ஜல்லிக்கட்டு இன்று மதியம் நடக்க இருப்பதாக நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டதுடன், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மைதானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
முதலில் இன்று காலை ஜல்லிக்கட்டு நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு இன்று மதியம் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு இடத்தைக் குறிப்பிட்டு, மைதானம் தயார் என்றும் கலந்துகொள்ள விரும்பும் வீரர்களை அழைப்பதாகவும் அந்த நோட்டீஸில் உள்ளது.