சென்னை,

மிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தியே தீருவோம் என்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆதரவு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடந்துவருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழக முதல்வரும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை உறுதி செய்வோம் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

தமிழக அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கட்டிக் காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் இருந்து தமிழக அரசு சிறிதும் பின்வாங்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் சட்டம் இயற்ற இயலாது. அதனால்தான் தமிழக அரசு சட்டம் இயற்ற முடியவில்லை  என குறிப்பிட்டார்.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவால் 2014-ல் இருந்து ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில்  ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில்   விரைவில் தீர்ப்பு வர உள்ளது.  உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பால் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.