தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

Must read

சென்னை,

ரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு, அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு வழங்கப்படும் போனஸ் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 உச்ச வரம்பில் பொங்கல் போனஸ் வழங்கப்படும்

 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும்

முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதால் அரசுக்கு ரூ.325 கோடியே 20 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article