ஜாதி பேதமின்றி தமிழக அரசே ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்!: திருமாவளவன்

Must read

 

ஜாதி பேதமின்றி தமிழக அரசே ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்!: திருமாவளவன்

“ஜல்லிக்கட்டில் மாட்டை விடுவதற்கும், மாட்டைப் பிடிப்பதற்கும்,  அதனைப் பார்த்து ரசிப்பதற்கும் எவரொருவருக்கும் சாதி, மதத்தின் பெயரில் தடை இருக்கக்கூடாது. அவ்வாறு தடுப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டை சாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

அரசிடம் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப் படவேண்டும் என்று தமிழக அரசின் 2009 ஆம் ஆண்டைய சட்டத்தில் இருந்தது. அதற்கு மாறாக இனிமேல் தமிழக அரசே ஜல்லிக்கட்டைப் பொறுப்பேற்று நடத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு. அதன்மீது பந்தயத் தொகை நிர்ணயிப்பது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் அதுவொரு விளையாட்டு என்ற நிலையை மாற்றி அதனைச் சூதாட்டம் எனக் குற்றம் சாட்டுவதற்கு வழிவகுக்கிறது. எனவே, போட்டி, பந்தயத்தொகை நிர்ணயம் போன்றவற்றிற்கு இடமில்லாத நிலையை உருவாக்கிட வேண்டும்” இவ்வாறு திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

More articles

Latest article