கடலூர்,
நாம் தமிழர் கட்சி சார்பில் தற்போது கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இது தமிழக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலங்காலமாக நடைபெற்றுவரும் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை பீட்டா போன்ற அமைப்புகளின் வழக்கு காரணமாக உச்சநீதி மன்றம் தடை செய்துள்ளது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று ஆவலோடு தமிழர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது.ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரிய மனுவையும் நிராகரித்தது விட்டது உச்ச நீதி மன்றம்.
ஏற்கனவே தமிழக அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவோம் என்று அறிவித்திருந்தன.
தமிழக மாணவர்களும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெற்றே தீரும் என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சி தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி காட்டியது.
சொன்னதை செய்து காட்டிவிட்டார் சீமான் என்று பொதுமக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
https://www.facebook.com/stephen.raj.12764874/posts/738698166279383