பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இன்று தீர்ப்பு வந்துவிடும் என்று பெரும்பாலோர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலைியல், ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துவிட்டது. மேலும், .ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி மனுவையும் நிராகரித்தது உச்சநீதி மன்றம் நிராகரித்துவிட்டது.

இதன் மூலம், “பொங்கல் பண்டிகைக்கு முன்பே தீர்ப்பளிக்க வேண்டும்” என்ற தமிழக அரசு சார்பான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

ஆகவே கடந்த இரு வருடங்களைப்போலவே, இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடத்த இயலாத நிலை ஏற்பட்டுவிடும் என்று, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, உச்சமன்ற நீதிபதிகள், “ஏன் மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துகிறீர்கள்.. சிங்கத்தை வைத்து நடத்தலாமே” என்று கிண்டலுடன் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.