மதுரை,

பொங்கலையொட்டி நடைபெற உள்ள வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகுறித்து மதுரை ஆட்சியில் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், மாவட்ட எஸ்பி மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர்கள்  கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக, கடந்த ஆண்டு தமிழகமே திரண்டு போராட்டம் நடத்தியது. அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில் புதிய  அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்னும் 15 நாளில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகமாக நடைபெறும் மதுரை மாவட்டத்தில், போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மதுரை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், எஸ்.பி. ஆகியோருடன் பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.