மாணவிகள் பர்தா அணிய கட்டாயப்படுத்த ஜகர்தா ஆளுநர் தடை

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.


பள்ளி நிர்வாகங்கள்  பெண் மாணவர்கள் பர்தா அணிய வேண்டும் என விதித்த விதிக்கு  ஜகார்த்தா ஆளுநர் தடை செய்தார்.
anti ijabஉலகெங்கும் பெண் சமத்துவம் பேணப் போராடும் அனைவரும், மதங்கள் பெண்களை அடிமைப்படுத்தும் சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
பெண் அடிமைச் சடங்குகள், அனைத்து மதங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு இந்தியக் கோவில்களில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி இல்லை. இதனை எதிர்த்து சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து  பெண்கள் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
anti hijabஉலகெங்கும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் எனும்விதியை எதிர்த்தும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப் படுகின்றன.
 
 
 
hijab 2
hijab2

ஜகர்த்தா குளோப் அறிக்கையின் படி, இந்தோனேஷியா மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லீமாக இருந்தால் கூட, முறையான உடை தேவையில்லை என்று அஹோக் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜஹாஜா பசூகி புர்னமா கூறினார். 1,700 ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளி முதல்வர்களிடம் பேசுகையில், 2006 ஆம் ஆண்டு பங்கா பெலிடங்க் தீவுகளின் அறிமுகத்தை நிர்வகிக்கும் போது இதே கட்டுப்பாடுகள் இருந்தன என்று அவர் கூறினார்.

 

Hijab-Muslim-Women-Getty“நம்மிடத்தில் 93 சதவீதம் முஸ்லீம் இருக்கிறார்கள். திடீரென்று, அனைத்து ஆசிரியர்களுக்கும் பர்தா அணியும் மாணவர்கள் தேவைப்படுகிறார்கள். உண்மையில், இது முக்காடு அணிவதில் உள்ள நம்பிக்கை,” என்று போர்டல் கோம்பாஸ் மேற்கோள் காட்டியது போல் அவர் கூறினார். “பர்தா அணியும் நடைமுறை உங்களை காப்பற்றும் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? நீங்கள் நம்பினாலும், நீங்கள் எல்லா மாணவர்களும் பர்தா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.” அவரது பதில் முஸ்லிம்களை குழப்ப கூடும் என்பதை உணர்ந்தவர், இந்த தடையை இஸ்லாமியத்திற்கு எதிரானதாக பார்க்க கூடாது என்று கிறிஸ்துவர் அஹோக் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

hqdefault

“விவாதிக்க வேண்டும் என்றால், கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் கூட முக்காடு அணிகிறார்கள் என்றும் நாம் கூறலாம். ஆனால் நான் இறையியல் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் ஒரு குழந்தைக்கு அப்படி கற்பிக்க முடியாது, கற்பிக்கவும் கூடாது . “ஆனால் நீங்கள் 12 வயது குழந்தைக்கு கடம் அல்-குர்ஆன் கற்று கொடுத்தீர்களானால், நான் முழுமையாக ஆதரவு தருகிறேன்.” கிழக்கு பெலிடங்க் மாகாணத்தின் தலைவராக இருந்த எனது அனுபவத்தின் படி பெண்கள் பள்ளிகளில் பர்தாவை அக்கறையுடன் அணிவதில்லை, அதனால் நான் பள்ளிக்க்களின் விதிமுறைக்கு  எதிராக உள்ளேன் என்றார்.

Print
 
“பள்ளி சமையலறையில் அணிந்து கொண்டிருந்த பர்தாவை அங்கிருந்து வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் ஏறியபின், உடனடியாக கழற்றிவிட்டார்,” என்று அவர் கூறினார். “பர்தா அணிவது ஒரு முஸ்லீமின் குணத்திற்கு ஒரு பகுதியாக உள்ளது என்று நினைக்கும் வரை அவர்கள் நன்கு கற்பிக்கப்பட வேண்டும் அப்போது தான் அவர்கள் அதை மனதார ஏற்றுக்கொண்டு, மரியாதையாக அணிவர். “அது ஏற்கப்படவில்லை எனில் அவர்கள் பள்ளிக்கு வெளியே வந்த பிறகு, அதை தூக்கி எறிகிறார்கள். அவர்கள் அதை மதிப்பதற்கு பதிலாக அவர்கள் அதை பயன்படுத்தி, இக்கட்டான மத நடத்தையை உண்டாக்குகிறார்கள்”.
 
 
 
Tjahaja Basuki Purnama indonesia jakarta governorநஹத்லதுல் உலமா (NU) என்ற இயக்கத்திற்குப் பிறகு யூத் முஹம்மதான் என்ற பெரிய சமூக இயக்கம், அரசியல்வாதிகள் முஸ்லீம்களுக்கு தங்கள் மத நம்பிக்கைகளை பற்றி கற்பிக்க தேவையில்லை என்று கூறி அஹோக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். . “அது ஒரு கடமை மற்றும் ஒரு உடற்பயிற்சி போன்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பர்தா அணிவதற்கு நம்பிக்கை தேவை தான் ஆனால் அதற்கு குழந்தைகளுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். “இது சம்பந்தமாக கல்வி மற்றும் பயிற்சி தரும் ஒரு செயல்முறை உள்ளது,” என்று அதன் தலைவர் தனில் அன்சார் சிமஞ்சுன்டக் ரிபப்ளிகா பத்திரிக்கைக்கு கூறினார்.
 
 
 
 

hijab two paste
அல் அமிரா மற்றும் ஷாய்லா என இருவகை பர்தாக்கள் அணியப் படுகின்றது

 
 
 
 

More articles

Latest article