அயோத்தி: உலகமே உற்று நோக்கிய அயோத்தி கோயில் கருவறையில் பால ராமர் சிலை கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அப்போது விண்ணதிர ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் மோடி, விஎச்பி தலைவர் மோகன் பகவத் உள்பட உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்துக்களின் கனவு நிகழ்வான அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, இன்று நண்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 வினாடிகளில்) 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக ராமர்கோவில் கும்பாபிஷேக சடங்குகளை கோவிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்தார். ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த தீட்சித் தலைமையில் 121 அர்ச்சகர்கள் இன்று கும்பாபிஷேகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, மகாந்த் நிருத்ய கோபால் தாஸ் நாற்காலியிலும், பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மோகன் பகவத், ஆளுநர் ஆனந்தி பென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சிலை முன் கோவில் கருவறைக்குள் அமர்ந்திருந்தனர். மற்றும் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கோவில் பிரகாரங்களில் அமர்ந்திருந்தனர்.