டில்லி:
பாகிஸ்தான் அரசு அமைய ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பு உதவி செய்தாக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி குற்றம் சாட்டி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலை நடத்தியதுதான் நாங்கள்தான் என்று பாகிஸ்தானை உறைவிடமாக கொண்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கொக்கரித்துள்ளது.
இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் உதவி செய்துவருவதாகவும், அதன்மூலமே காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத நிகழ்வுகளை அரங்கேற்றி வருவதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், புல்வாமா மாவட்டத்தில் நடந்துள்ள தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு கைவிரித்துள்ளது.
வன்முறையை பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது. அது உலகத்தில் எங்கு நடந்தாலும் அதனை கண்டிக்க பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது. நடந்தது என்ன என்பதை விசாரிக்காமல் காஷ்மீர் தாக்குதலையும், எங்களையும் தொடர்பு படுத்தினால் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது
ஆனால், ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பு தலைவனான மசூர் அசாத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க மோடி, பாகிஸ்தானிடம் வலியுறுத்தி வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறி உள்ளார்.
இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தாஸ் அரசு அமைய ஜெய்ஷ்இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு உதவி செய்ததாகவும், பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள மணிஷ்திவாரி, பாகிஸ்தானில் பகவல்புர் ( Bahawalpur) பகுதிக்கு வெளியே ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத இயக்கத்தின் புதிய கட்டிடம் கட்ட இம்ரான் கான் முழு உதவி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மவுலான மசூர் அசாத்தை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி இம்ரான்கானிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலில் எந்த அணியும் வெற்றிபெறாத நிலையில், இம்ரான்கான் ஆட்சி அமைக்க சிறிய கட்சிகளின் ஆதரவு அளிக்க ஜெய்ஷ்இமுகமது என்ற பயங்கரவாத அமைப்பு பின்னணியில் இருந்து உதவியாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.