இமாசலப் பிரதேச முதல்வராக ஜெய் ராம் தாகுர் தேர்வு

Must read

டில்லி

மாசலப் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று இமாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது.   அந்த மாநில முதல்வராக தற்போது ஜெய்ராம் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  சுமார் 52 வயதாகும் இவர்  திருமனம் ஆனவர்.  இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இவர் மண்டி மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1965 ஆம் ஆண்டு பிறந்தவர்.   இவர் தந்தை மிகவும் ஏழ்மையில் இருந்ததால் குடும்பத்தை  நடத்த மிகவும் சிரமப் பட்டு வந்தார்.    இவர் தந்தைக்கு இவரையும் சேர்த்து மூன்று மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.  இவர் குடும்பத்தில் கடைசி குழந்தை என்பதால் இவர் தந்தையும் சகோதரர்களும் விவ்சாயப் பணி புரிந்து இவரை படிக்க வைத்தனர்.

ஜெய்ராம் தாக்குர் நன்கு படித்து பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்றார்.    அவர் குடும்பத்தினர் அவரை ஏதாவது அலுவலகத்தில் பணி புரியுமாறு கூறினார்.   ஆனால் அவர் மனம் அரசியலை விரும்பியது.   வீட்டினர் எதிர்ப்பையும் மீறி அவர் 1993 ஆம் ஆண்டு பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டி இட்டார்.  அப்போது 28 வயதான அவருக்கு தேர்தல் செலவுக்கும் பணம் இன்றி கடும் பாடு பட்டார்.    அந்த தேர்தலில் அவர் தோற்றார்.

அதன் பிறகும் அசராமல் அடுத்த 1998 ஆம் வருடம் மீண்டும் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.   அதன் பின்பு அவர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.    இவர் 2008ல் துமால் அரசில் அமைச்சராக பணி புரிந்துள்ளார்.   இவர் மனைவி சாதன கர்னாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

More articles

Latest article