
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான ‘டார்லிங்’ படத்தைத் தயாரித்தது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் – ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘ஜெயில்’ என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், ரவி மரியா உள்பட முக்கியமான நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் நடிப்புக்காக தேசிய விருது வென்ற தனுஷ் நாளை மாலை 5 மணிக்கு டீஸரை வெளியிடுகிறார். டீஸர் வெளியீடு குறித்த போஸ்டரை பகிர்ந்திருக்கும் வசந்தபாலன், ‘எத்தனை பெரிய தவமிருந்தேன் நாளை பெய்யப்போகும் ஒரு துளி மழைக்காக…’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]