வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஜெயில்’ .ராதிகா சரத்குமார், அபர்ணநதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீதரன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். அவருடன் இணைந்து நடிகை அதிதி ராவ் சொந்தக் குரலில் பாடி தமிழில் பாடகியாகவும் அறிமுகமாகிறார்.

ஜி.வி.பிரகாஷின் 33-வது பிறந்தநாள் பரிசாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

[youtube-feed feed=1]