நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்னபூரணி.

திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பார்த்த வெற்றி இல்லையென்றாலும் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது.

இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் சர்ச்சையில் சிக்கியது. மனவுறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதைக் கருத்தாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

வால்மீகி ராமாயணத்தில் ராமரும் லட்சுமணனும் காட்டு உயிரினங்களை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டதாக கூறப்பட்டுள்ளதாக வரும் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் தகவல் தொழில்நுட்ப சட்டவிதிகளின் படி ஓடிடி தளத்தில் இருந்து இந்தப்படம் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் நயன்தாரா இதுகுறித்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று தொடங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தனிக்கை சான்றிதழ் பெற்று திரையரங்குகளில் திரையிடப்பட்ட படத்தை ஓடிடியில் இருந்து நீக்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தான். எனது 20 ஆண்டுகால திரைப்பயணத்தின் நோக்கம் நேர்மறையான எண்ணங்களை பரப்புவதே” என்றும் தெரிவித்துள்ளார்.

கடவுளின் மீது நம்பிக்கை வைத்து அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் செல்லும் நான் இதை எந்த உள்நோக்கத்துடனும் செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.