சென்னை:
தபோதகர் ஜாஹிர் நாயக்  மீது வீண் பழி சுமத்தி அவரது இஸ்லாமிய பணிகளை முடக்க சதி நடப்பதாகக் கூறி தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் நடந்த இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு, இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனிபா, மனித நேய மக்கள் கட்சிதலைவர் ஜாவகரிருல்லாஹ், எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர் தெகலான்பாகவி, இந்திய தவ்கித் ஜமாத் தலைவர் பாக்கர், உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சாத்வி - ஜாஹிர்
சாத்வி – ஜாஹிர்

ஏ.கே. அனிபா செய்தியாளர்களிடம் பேசும்போது, “பா.ஜ.க. அரசு அமைந்ததில் இருந்து  தொடர்ந்து சிறுபான்மை மக்கள் மீது அநீதி இழைத்து வருகிறது. இப்போது மதபோதகர் ஜாஹீர் நாயக்கை தீவிரவாதியாக சித்தரித்து அவதூறை பரப்பி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. மத்திய அரசு சிறுப்பின்னையினர் அச்சிறுத்தலை உடனடியாக நிறுத்தி கொள்ளவிட்டால் மாநில அளவிலான போராட்டம் வெடிக்கும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென மத்திய அமைச்சர் சாத்வி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் சாத்வி, ஜாஹிர் நாயக் தலையை வெட்டி வருபவர்களுக்கு ஐம்பது லட்சம் பரிசு அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.