புதுச்சேரி,

டப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று திடீரென கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள கூர்க் மலைப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுடன் நேற்று கவர்னரை சந்தித்து வலியுறுத்தினார்.

அதேநேரத்தில், அவரது தீவிர ஆதரவாளராக இருந்து வந்த ஜக்கயைன் எம்எல்ஏ, நேற்று திடீரென தலைமை செயலகம் வந்து, எடப்பாடிக்கு ஆதரவு தருவதாக கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன், புதுச்சேரி சொகுசு விடுத்தியில் அடைத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த  தனது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவைரையும், உடனடியாக  விடு தியை காலி செய்துவிட்டு சென்னை வரவழைத்தார். அதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கர்நாடகாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மைசூர் அருகே உள்ள கூர்க் மலைப்பகுதியில் உள்ள சொகுசு விடுதியில்  தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டத்தை தொடர்ந்து, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் பலர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக எடப்பாடி அணியினர் தெரிவித்திருந்த நிலையில, ஜக்கையனும் அணி தாவினார். அவரைத்தொடர்ந்து மேலும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள டிடிவி தினகரன்,  தனது ஆதரவு எம்எல்ஏக்களை உடனடியாக இடம் மாற்றி  கூர்க் அழைத்துச்சென்று, அங்கு தங்க வைத்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.