அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.12,500 ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

Must read

ஐதராபாத்:  

ஆந்திராவில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் ரூ.12,500 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ரித்து பரோசா என்ற திட்டம் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்த முக்கிய திட்டம்.

இந்த திட்டத்தின்படி, அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.12,500 ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்கு ரூ.13,125 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ராபி மற்றும் காரீப் காலத்துக்கு முன்பு இந்த தொகையை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் 62% பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்தால் இவர்கள் பயனடைவார்கள் என்று ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விதைகளை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எச்சரித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

More articles

Latest article