நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இன்று ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. 190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் வெளியாவதாக முன்பே கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜகமே தந்திரம் ரிலீஸான வேகத்தில் அதை ஆன்லைனில் ஹெச்.டி. தரத்தில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். எந்த படம் ரிலீஸானாலும் அதை ஆன்லைனில் கசியவிடுவதையே ஒரு வேலையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
படம் தியேட்டர்களில் அல்ல மாறாக ஓடிடியில் வெளியானாலும் அதை கசியவிட்டு வேடிக்கை பார்க்கிறது. கொரோனா பான்டமிக்கால் தனுஷ் படம் ஓடிடியில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.