பெருவிரலில் காயமடைந்த ஜடேஜா – வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

Must read

சிட்னி: இடதுகை பெருவிரலில் காயமடைந்துள்ள ஜடேஜாவால், இந்திய அணிக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஜடேஜா, 28 ரன்கள் அடித்து கடைசிவரை நாட்அவுட்டாக இருந்தார். ஆனால், மிட்செல் ஸ்டார்க் வீசிய ஷாட் பந்தில், இவரது இடது கை கையுற‍ையில் அடிபட்டது.

கையுறை அகற்றப்பட்டு பார்க்கையில், அவரின் இடதுகை பெருவிரலில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. ஜடேஜா இடதுகை பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அவர் ஸ்கேன் செய்வதற்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை இன்று ஆடியபோது, ஜடேஜாவால் பந்துவீச இயலவில்லை.

முதல் இன்னிங்ஸில், பந்து வீசுவதற்கு தாமதமாக வாய்ப்பு வழங்கப்பட்ட ஜடேஜா, பிரமாதமாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தற்போது, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 103 ரன்களை எடுத்து, இந்தியாவைவிட தற்போதைய நிலையில் 197 ரன்கள் முன்னிலைப் பெற்று மிரட்டுகிறது.

 

More articles

Latest article