சிட்னி: காயத்திற்கு உள்ளான ஜடேஜாவின் இடதுகை பெருவிரலில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
சிட்னி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து, அவரின் இடதுகை பெருவிரலை தாக்கியது.
இதனால், அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அதேசமயம், பேட்டிங்கின்போது, தேவைப்பட்டால் களமிறங்க தயாராக இருந்தார். இந்நிலையில், அடிபட்ட இடத்தில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
அவர், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் பங்கேற்காமல் நாடு திரும்பி, பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபடுகிறார். “ஆபரேஷன் முடிந்துள்ளது. போட்டிகளில் தற்போதைக்கு பங்கேற்க இயலாது. அதேசமயம், விரைவில் சிறப்பான முறையில் மீண்டும் வருவேன்” என்றுள்ளார் ஜடேஜா.