டல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையின் தற்போதைய நிலை குறித்து அம் மருத்துமனை இன்று பத்தாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
j
உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் கடந்த 22ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி அதிர வைத்தன. இதற்கிடையே அவரது உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வருகறது.
ap
இன்று வெளியிடப்பட்டிருக்கும் பத்தாவது அறிக்கையில், , “மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நலம் தீவிர சிகிச்சை நிபுணர்கள், சிறப்பு மருத்துவக் குழுவில் உள்ள மற்ற நிபுணர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  முதல்வரின் சுவாசத்துக்கு அவசியமான கருவிகளின் உதவி, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்ல ஆன்டிபயாட்டிக்குகள், ஊட்டச்சத்து, பிஸியோதெரபி சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஜி.கிலானி (நுரையீரல் நோய் நிபுணர்), மறுபடியும் அப்பல்லோ வந்துள்ளார். 9/10/2016 மற்றும் 10/10/ 2016 ஆகிய இரு நாட்களும் முதல்வரின் உடல்நிலையை பரிசோதனை செய்தார். அவரது அறிவுரையின்படி. அப்பல்லோவின் மருத்துவ குழுவினர் தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்று அப்பல்லோவின் மருத்து அறிக்கை தெரிவிக்கிறது.