மும்பை: அரசியல் மற்றும் ஆளுகை முறையாக ஜனநாயகத்தின் செயல்திறன் உலகெங்கிலுமே சந்தேகத்திற்கிடமான ஒன்றாக உள்ளது என்றும், அத்தகைய அமைப்பில் ஒரு தேசியக் கட்சி எதிர்பார்க்கும் அடிமட்ட அளவிலான செயல்பாட்டினை, பாஜக மட்டுமே வழங்க முடியும் என்றும் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

இந்தியாவில் பல கட்சி பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின் தோல்விகளை நேரடியாகக் குறிப்பிடாமல், ஒரு அமைப்பாக ஜனநாயகம் எதிர்பார்த்த முடிவுகளைத் தராதபோது, ​​அது சமுதாயத்துக்கும், பொதுவாக அரசியலுக்கும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் 11 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக தூதுக்குழுவின் சீன விஜயத்திற்குப் பின்னர், பாஜக தலைவர் அமித் ஷா இந்தியாவில் அரசியல் அமைப்பு மற்றும் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு குறித்து கேள்விகளை எழுப்பினார்.

“நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் இருந்தும் உண்மையில், ஐந்து கட்சிகள் மட்டுமே நமது ஜனநாயகத்திற்கு தகுதியானவை என்றும், அதன் அனைத்து மூலைகளையும் சென்றடைய அவற்றால் மட்டுமே முடியும். 1.3 பில்லியன் மக்கள் வாழும் நாட்டில், ஐந்து கட்சிகள் மட்டுமே ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் என்பது கவலைக்குரிய விஷயம். அதிலும் பாஜக, நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கிறது என்று கூறினார் நட்டா.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனநாயக அமைப்பின் தோல்விகளுக்கு பதிலளித்த அமித்ஷா கூறியதாவது: சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்து, நமது பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு தோல்வியுற்றதா, என்றும் அதனால் நமது இலக்குகளை எட்ட முடியுமா என்றும் நமது அரசியலமைப்பினைக் கட்டமைத்தவர்கள் கனவு கண்ட அந்த பாரதத்தை உருவாக்க முடியுமா என்கிற ஒரு கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது என்பதுதான்.