சென்னை

முன்னள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜே கே ரித்திஷ் இன்று திடீரென மரணம் அடைந்தார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே கே ரித்திஷ் கானல் நீர் என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து நாயகன், பெண் சிங்கம் என வெகு சில படங்களில் மட்டுமே நடித்தார். அப்படி இருந்தலும் அவர் தனது பண பலத்தாலும் பல வித செய்கைகளாலும் பிரபலம் அடைந்தார்.

அரசியலில் நுழைந்த ஜே கே ரித்திஷ் திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு க அழகிரியின் ஆதரவாளரான இவர் அழகிரி கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பிறகு தாமும் விலகினார். அதன் பிறகு அதிமுகவில்சேர்ந்தார். நடிகர் சங்க தேர்தலில் விஷால் – நாசர் – கார்த்தி வெற்றிக்கு பெரிதும் உதவியவர் ரித்தீஷ் ஆகும்.

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் சமீபத்தில் வெளியான எல் கே ஜி என்னும் திரைப்படத்தில் நடித்தார். அத்துடன் நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜே கே ரித்திஷ் நெஞ்சு வலி காரனமாக ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவு திரையுலகுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மறைந்த ரித்தீஷுக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.