முதல்வர் ஜெ. உடல் நிலை: கனத்த மவுனம் காக்கும் தமிழக அரசு

Must read

சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

கோப்பு படம்
கோப்பு படம்

நேற்று இரவு முதலே தமிழகம் முழுதுமிருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னை வந்து அப்பல்லோ வாசலில் குவிய ஆரம்பித்தனர். காவல்துறையினர் உசார் படுத்தப்பட்டனர்.
சென்னையின் அனைத்து காவல் நிலையங்களிலும் ரிசர்வ் போலீசார் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாகவும் தகவல் பரவியது.
அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் பயண திட்டத்தை ஒத்திவைத்து சென்னை திரும்பினர்.
இப்படி ஒட்டுமொத்த தமிழகமும் பதட்டமான சூழலில் இருக்கிறது.  இந்தியாவின் மொத்த பார்வையும், சென்னை நோக்கி குவிந்துள்ளது.
ஆனால் தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து, தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர்களோ, தலைமை செயலரோ இதுவரை அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
உண்மை நிலையை அரசின் சார்பில் வெளியிட்டால் பதட்டம் குறையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசின் சார்பில் கனத்த மவுனமே நிலவுகிறது.
 

More articles

Latest article