சென்னை:

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து தங்களது கோரிக்கைகளில் பாதியை நிறைவேற்றியிருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், இரு அணிகளும் இணைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இந்நிலையில் ஜெ.தீபா இணைப்பு-பிணைப்பு- பிழைப்பு தேடிகளுக்கே என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘பிளவுபட்ட கட்சிகள் இது வரை மீண்டும் இணைந்ததில்லை. இதற்கு உதாரணமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணையவில்லை. அதேபோல் தி.க., திமுக.வும் இணையவில்லை.

 

 

இந்த வரிசையில் சசிகலா அணி தற்போது எடப்பாடி அணியாக மாறியுள்ளது. எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைந்தாலும் எனது தலைமையில் அதிமுக தொடர்ந்து செயல்படும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுத்துப் பிழைகள் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.