புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் தொடரந்து கண்காணித்து வருகிறது.


தேர்தல் ஆணைய செயலாளர் பவன் திவான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசியல் சாசனத்தின் 324-வது பிரிவின் கீழ், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் நடத்துவது என தேர்தல் ஆணையத்தால் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

தேர்தல் நடத்துவதற்கான சூழலையும், சரியான நேரத்தையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

அமர்நாத் யாத்திரை முடிந்ததும் தேர்தல் அட்டவணையை வெளியிடுவது குறித்து முடிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.