யானை தந்தங்கள்

கோலாலம்பூர்

கோடிக்கணக்கில் மதிப்புள்ள யானை தந்தங்களும், எறும்புண்ணி செதில்களும் மலேசியா விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது.

நைஜீரியாவில் இருந்து அபுதாபி வழியாக வந்த எதிஹாட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் ஒரு பார்சல் மலேசியாவுக்கு வந்திருந்தது.  அதில் சந்தேகமுற்ற சுங்க அதிகாரிகள் அதை பிரித்து பார்த்த போது அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்த்ங்கள் இருந்தது.  அதன் மதிப்பு யூரோவில் 48500 என சொல்லப்படுகிறது.

எறும்புண்ணி செதில்கள்

அதே தினம் காங்கோவில் இருந்து எதியோப்பியா ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த மற்றொரு பார்சலயும்  சந்தேகத்தின் பேரில்  பிரித்த போது அதில் எறும்புண்ணியின் செதில்கள் இருந்தன.  இவற்றின் மதிப்பு யூரோவில் 68709 என சொல்லப்படுகிறது.

இரு பார்சல்களும் போலி முகவரிக்கு அனுப்பப் பட்டிருந்ததால் அந்த கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.  அதே போல் அனுப்புனர் முகவரியும் போலி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எறும்புண்ணி

இது போல பலமுறை கோலாலம்பூர் விமான நிலையத்தில் தந்தங்களும், எறும்புண்ணி செதில்களும் பிடிபட்டுள்ளன.  இந்த கடத்தலுக்கு விமான நிலைய அதிகாரிகளும் ஒத்துழைக்கின்றனர் என சுங்கத்துறை சந்தேகப்படுகிறது.

அது மட்டுமின்றி சுங்கத்துறையின் நடவடிக்கைகள் கடத்தல் காரர்களுக்கு உடனுக்குடன் யாரோ தெரிவித்து விடுவதாகவும் கூறப்படுகிறது.   உதாரணத்துக்கு இது போல பார்சல் பிடிபடும் போது அதை எடுக்க யாரும் வருவதில்லையாம்.

எறும்புண்ணியின் செதில்கள் மருத்துவ குணம் உடையவை எனவும் அதைக் கொண்டு சட்ட விரோதமாக ஆண்மையை அதிகரிக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.  யானைத் தந்தங்களின் மதிப்பும் அனைவரும் அறிந்ததே.