மாதவிடாய் காலத்தில் பயன்படும் நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் “பேட் மேன்” என்ற இந்தித் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்காக ‘பேட்மேன் சேலன்ஞ்” என்ற பெயரில் சமூகவலைதளங்களில் நாப்கின்களுடன் பிரபலங்கள் இருக்கும் படங்களை பதிந்து வருகிறார்கள். இதைப் பார்த்து மற்ற நெட்டிசன்களும் அதே போல் நாப்கின்களுடன் படம் எடுத்து பதிவிடுகிறார்கள்.
நாப்கின் குறித்த விழிப்புணர்வு ஏற்பட இது ஒரு நல்ல முயற்சிதான் என்றும் இது பேட்மேன் படத்துக்கான விளம்பரமாகத்தான் பயன்படும் என்றும் இருவேறு கருத்துக்கள் இணையங்களில் உலவுகின்றன.
இந்த நிலையில் எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய முகநூல் பதிவு ஒன்று கவனத்தை ஈர்க்கிறது.
அந்தப் பதிவு:
பயன்பாடு மற்றும் அவசியம் குறித்தும் அது குமாதவிடாய் காலங்களில் பயன்படும் நாப்கின்களை வாங்கும் போது, பெண்கள் தயங்குவது வழக்கம். யாராவது பார்த்துவிட்டு கேலி செய்வார்கள் என்கிற எண்ணம்தான் அதற்குக் காரணம்.
இந்த எண்ணத்தைப் போக்கபெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் மெத்து எனப்படும் பேட்களின் பயன்பாடு முடிந்ததும் அப்படியே தூக்கி எறிவதால் ஏற்படும் கேடுகள் பரவலாகப் பேசப்படுகிறது. அது துப்புரவுப் பணியாளர்களையே கடுமையாகப் பாதிக்கிறது. அந்த மெத்துகளின் துர்நார்ற்றம் குடலைப் பிடுங்குவதால் அவர்களுக்கு ஏற்படும் அவதி கொடுமையானது. அதற்கும் மேலாக, குருதியுடன் எறியும் மெத்துகள் தொற்று நோய்களையும் பரப்பக் கூடும்.
இந்த மெத்துகள் மட்டுமல்ல, குழநதைகளுக்கும் சிலநேரம் முதியோர்களுக்கும் சிறுநீர், மலக் காப்பாகப் பயன்படும் மெத்துகளும் (டயபர்) துப்புரவுப் பணியாளர்களுக்குச் செய்யும் பெரும் கேடாகும். மலம் அள்ளும் தொழிலிலிருந்து அவர்களை விலக்க வேண்டும் எனக் கூறும் நம்மில் பலரும் கூட அப்படியே மலத்துடன் குழந்தை மெத்துகளைக் குப்பையில் போட்டு, அதே அசிங்கத்தை அவர்கள் கைகளில் திணிக்கிறோம்.
பெண்களின் மாதாந்திர மெத்துகளாக இருந்தாலும் சரி, குழந்தைகளுக்கான சிறுநீர் மெத்துகளாக இருந்தாலும் சரி, குப்பைத் தொட்டியில் போடுமுன் அவற்றை நன்கு நீரில் அலசி நன்கு தூய்மையாக்க வேண்டும். இறுதியில் அவை நன்கு மணக்கும். துளியும் துர்நாற்றம் வீசாது. பிறகு தாராளமாகக் குப்பையில் வீசலாம். எவருக்கும் எத்துன்பமும் இல்லை. இதைத்தான் தொடர்ந்து என் வீட்டில் என் மனைவியும் மகளும் செய்கிறார்கள்.
பி.கு. ஆங்கிலத்தில் பேட் எனும் சொல்லுக்கு மெத்து எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இந்த பேட் என்பது மென்மையான பகுதிகளைக் காக்கும் வகையில் மெத்து மெத்தனச் செய்யப்படுவதால், இந்தச் சொல் பொருத்தமானது எனக் கருதுகிறேன். இதற்கு மாற்றாக, காப்புறை, தூமையுறை, தூமைப் பட்டி, தூயுறை எனப் பல சொற்களும் என்னுள் வந்து போயின. இனி பேட்களைத் தூய்மையாக வீசியெறிவோம். இதற்கு நல்ல தமிழ்ச் சொல் ஒன்றையும் உருவாக்குவோம்.