அமராவதி:

தெலுங்கானாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து, எரித்துக்கொன்ற குற்றவாளி களை சுட்டுக்கொன்றது சரியே  என்று தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,  பாலியல் வழக்கில்3 வாரங்களில் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக, கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சிலர் மட்டுமே  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஆந்திர சட்டமன்றத்தில் ஆந்திர சட்ட சபையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி,  இரண்டு மகள்களின் தந்தை என்ற முறையிலும், ஒரு கணவராக, ஒரு சகோதரராக ஐதராபாத் சம்பவம் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியதாக கூறியவர், தெலுங்கானா சம்பவத்தை ஊடகங்கள் தீவிரமாக சுட்டிக்காட்டின. மக்களின் உணர்வையும் பெற்றோர் உணர்வையும் ஏற்று தெலுங்கானா அரசு பதிலடியாக என் கவுண்டரை செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கொடூர விவகாரத்தல்   மனித உரிமை மீறல் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர், திரைபடத்தில் ஹீரோ என்கவுண்டர் செய்தால் கை தட்டி பாராட்டு கிறார்கள். அதை நிஜ வாழ்க்கையில் செய்தால் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும்,   நிஜ வாழ்க்கை யில் துணிச்சலான ஒருவர் இதைச் செய்தால், டெல்லி தேசிய மனித உரிமை ஆணையத்தில் இருந்து ஒருவர் வந்து நீங்கள் செய்தது தவறு என்று கூறுவார். இதுபோன்று நடக்கக்கூடாது.

ஏன் என்கவுன்ட்டர் செய்தார், எதற்காகச் செய்தார் என்று கேட்க வேண்டும். நம்முடைய சட்டங்கள் மோசமான நிலையில் இருக்கின்றன. டெல்லி இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட பிறகு நிர்பயா சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு பிறகும் குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களில் 3 வாரங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய ஜெகன்,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்யவும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்கிடவும் சட்ட மசோதா விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசமாக கூறினார்.