சென்னை:

திர்க்கட்சி தலைவர்களின் இடங்களில் ரெய்டு நடத்தப்பபடுவது வருமான வரித் துறையின் எதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகளையே  காட்டுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டமாக  டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நேற்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீடு உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதுபோல தேனி அமமுக அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு உள்பட பல இடங்களிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார். தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில், வருமான வரித்துறையினரின் ரெய்டுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ள காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே

அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே ‘துப்பு’ கிடைக்கிறது?!

திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி..

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.