“இது நம்ம ஆளு” திரைப்படத்தை வேலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிம்பு – நடிகை நயன்தாரா நடித்த திரைப்படத்தை சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் வெளியீடு, பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் அறிவித்தார்.
ஆனால்சென்னை உயர் நீதி மன்றத்தில் நேற்று ,  சஞ்சய் குமார் லால்வாணி என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த மனுவில்,  “படத்தின் தயாரிப்பு செலவிற்காக டி.ராஜேந்தர் என்னிடம்  1 கோடியே 9 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.  கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி 36 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்துவதாக கூறியனார்.  உறுதியளித்தபடி குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால்  ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு பகுதிகளில் படத்தை வெளியிட உரிமை அளிப்பதாகவும் கூறினார்.
download (1)
ஆனால் பணத்தையும் தரவில்லை, வெளியீட்டு உரிமையும் தரவில்லை. ஆகவே இது நம்ம ஆளு திரைப்படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதியில் (வேலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ) வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று ,  சஞ்சய் குமார் லால்வாணி தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ‘இது நம்ம ஆளு’ படத்தை அந்த இரண்டு பகுதிகளிலும் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.