பக்கத்து இருக்கையில் உடல் பருமனான ஒருவர் அமர்ந்து தனது இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டதால் 9 மணிநேரங்கள் அவதிப்பட்ட ஒரு இத்தாலிய வழக்கறிஞர் தனக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தராத எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
fat
ஜார்ஜியோ டெஸ்ட்ரோ என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார்.
தனக்கு அருகில் உடல் பருமனான நபர் வந்து அமர்ந்ததால் சற்று அவதிப்பட்ட டெஸ்ட்ரோ தனக்கு ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்துதரும்படி விமான ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் தனக்கு எந்த உதவியும் செய்யாததால் தான் நின்று கொண்டு பயணித்ததாக சொல்லி எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்து தனக்கு € 2,759.51 நஷ்ட ஈடாக பெற்றுத்தரும்படி நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலே இருப்பது அவர் ஜார்ஜியோ டெஸ்ட்ரோ ஆதாரத்துக்காக எடுத்த படமாகும்.
வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டதால் தீர்ப்பு வரும்வரை கருத்து தெரிவிக்க இயலாது என்று எமிரேட்ஸ் நிறுவனம் இது குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டது.