இந்து முன்னணி பிரமுகர் கொலை எதிரொலி : கோவை, திருப்பூரில் பேருந்துகள் தாக்கப்பட்டதால் பதற்றம், மேலும் ஒரு சில இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய கும்பல் மீது போலீஸார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
மருத்துவமனையில் இருந்து ராகுகாலம் முடிந்து வீடு திரும்பும் ஜெ.,உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா ராகுகாலம் முடிந்து வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
சஹாரா தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் பரோல் நீட்டிக்க மறுப்பு. இதனால் அவர் இன்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது.
சசிகலா புஷ்பா முன் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 26-ம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும் சசிகலா புஷ்பாவின் கணவர், மகனும் முன் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அயன் குறிஞ்சிப்பாடியில் விளை நிலங்களுக்கு ஓடை வழியே பாம்பு போன்ற விஷ ஜந்துகள் மற்றும் மழைக் காலங்களில் அதிகளவு செல்லும் தண்ணீரில் இறங்கி செல்லும் அவலநிலை உள்ளது. பாலம் அமைத்து கொடுக்க ஆட்சியர் உத்தரவிட்டும், இதுவரை பாலம் கட்ட பணிகள் துவங்கவில்லை.
தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும், பெண் குழந்தைகளின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக குஜராத் தொழிலதிபர் மகேஷ் சவானி, அறிவித்துள்ளார்.
248 மாணவ, மாணவிகளுக்கு 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றிவரும் நிலையில், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். .
கிராமத் திருக்கோயில்களில் திருப்பணிக்கான நிதியுதவி ரூ.1 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தெலங்கானா அரசு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளது.
ஹைதராபாத்தின் கச்சிபௌலி, நிஸாம்பெட், அல்வால், ஹகிம்பெட் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை தெலங்கானா அரசு கோரியுள்ளது.
துணை ஜனாதிபதி முகமது ஹமீது அன்சாரி புத்தகம் எழுதிய ‘குடிமகனும் சமூகமும்’ புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் நோய்களை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க இருப்பதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார்.
ஆர்.பி.ஐ., எனப்படும், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைகளை வகுக்கும் நிதிக் கொள்கை குழுவின் உறுப்பினர்களாக, மூன்று கல்வியாளர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
கடலாடி தாலுகாவின் நீர் ஆதாரமான மலட்டாறு அணைக்கட்டு திட்டம் பராமரிப்பின்றி தூர்ந்து போனதால், விவசாயம் பாதிக்கம் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
20 வருடத்திற்கு பின் பயனளிக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரக்கூடாது என ஜாக்டா மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டவை வலியுறுத்தியுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழு ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஆந்திராவில் கனமழைக்கு 8 பேர் பலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கில் சிக்கில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நமது பாராம்பரிய உடைகளை நாமே மறந்து வரும் நிலையில் புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நமது உடைகளான வேட்டி, சேலைகளை அதிகளவில் அணிந்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்று சென்னையில் பண்ருட்டி ராமசந்திரன் பேட்டியளித்துள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒய்வு தேவை என பருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ஆவேசமாக பேச வேண்டாம் கர்நாடக சபாநாயகர் கே.பி.கோலிவாட் உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அம்மா வை-பை மண்டலம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார்.
மும்பையில் பள்ளி குழந்தைகள் பார்த்ததாக கூறப்படும் தீவிரவாதிகள் இரண்டு பேரின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் போர் புரிய பாகிஸ்தான் தயாராவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் பரபரப்பான நெடுஞ்சாலையில் போர் விமானங்களை இயக்கி பாகிஸ்தான் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.
பெண் குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு பெற்றோர் தலைமறைவு. குழந்தையைத் தேடி யாரும் வராததால், திருப்பூரில் உள்ள மாவட்ட சமூக நலத் துறை காப்பகத்தில் அக்குழந்தை ஒப்படைத்தனர்.
கான்பூர் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 318 ரன்களில் சுருண்ட இந்தியா!. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் கான்பூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ரன்களை எடுத்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். தேனியில் இருந்து சற்று முன் சென்னை வந்த ஓபிஎஸ் ஜெயலலிதாவைக் காண ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்
உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து விவாதிக்க கர்நாடக சட்டமன்றத்தில் அவசர சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது.
ராம்குமாரின் உடலை பரிசோதனை செய்வதற்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட அரசு மருத்துவர்களுடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரையும் நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆந்திரத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழைக்கு வியாழக்கிழமை 5 பேர் பலியாகினர். தெலுங்கானாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கோழிக்கோடு அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஸ்கூட்டரை போட்டு ரயிலை கவிழ்க்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரைப் போன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசி வருகிறார் என்று பாஜக விமர்சித்துள்ளது.
காஷ்மீரில் ராணுவத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையிலேயே, அதுகுறித்து ஐ.நா. சபையில் நவாஸ் ஷெரீஃப் எதுவும் பேசவில்லையா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது
கோஹினுார் வைரத்தை மீட்டு வருவதற்கான அனைத்து வழிகளையும், ஆய்வு செய்து வருகிறோம்’ என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நாட்டு மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில், ரேடியோவில், பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தி வரும் மாதாந்திர உரையான, ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியை, தமிழ் உள்ளிட்ட, பிராந்திய மொழிகளிலும் ஒலிபரப்ப திட்டமிடப் பட்டு உள்ளது.
ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் மிகப் பெரும் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து 9-ஆவது ஆண்டாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்
காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபரும், கிங்ஃபிஷர் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான விஜய் மல்லையாவுக்கும், அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ரகுநாதனுக்கும் தலா 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
ஆப்பிரிக்காவின் நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளுக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, 5 நாள் அரசு முறை பயணமாக திங்கள்கிழமை (செப்.26) புறப்படுகிறார்
வன்முறை நீடிப்பதால் பெல்லட் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க முடியாது: ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்றம்
அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நவ்தேஜ் சிங் சர்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதராக வெளியுறவுப் பணியைச் (ஐஎஃப்எஸ்) சேர்ந்த உயரதிகாரி தரன்ஜித் சிங் சாந்து (53) நியமிக்கப்பட்டுள்ளார்.
8 செயற்கைகோள்களுடன் செப். 26-இல் விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி35 ராக்கெட்
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிபிஐ அதிகாரிகள் 3 பேர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் 4 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் விலையில்லாத ஆடுகளை வழங்குவதற்கு ரூ.132.5 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தரங்கம்பாடி அருகே கல்லூரி மாணவி ஒருவர், திங்கள்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அண்ணாமலை பல்கலைக்கழக முதுநிலை மாணவர் உள்பட 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்
தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வு தொடர்பாக, விண்ணப்பதாரர்களின் இரண்டாவது பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படுகிறது.
சபரிமலைக்கு வந்த பாடகர் ஏசுதாஸ் நேற்று முன்தினம் இரவு சன்னிதானத்தில் அரிவராசனம் பாடியது பக்தர்களை பரவசப்படுத்தியது.
மேற்கு தில்லியின் நிஹல் விஹார் பகுதியில் காதல் விவகாரத்தில், தான் காதலித்த பெண்ணின் காலிலேயே விழுமாறு பெண்ணின் தந்தையால் நிர்பந்திக்கப்பட்ட இளைஞர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கறுப்பினத்தவரை போலீசார் சுட்டுக் கொன்றதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது.
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
ஈரோட்டில் இருந்து சென்னை எழும்பூருக்கும், சென்ட்ரலில் இருந்து ஹெளராவுக்கும், புதுச்சேரியில் இருந்து சாந்த்ராகாச்சிக்கும் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன
பிரசவித்த தாய்மார்களுக்கான பிரத்யேக தொலைபேசி சேவை எண் 102 விரைவில் தொடங்கப்பட உள்ளது.