சிவகங்கை:
முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும், சிவகங்கை தொகுதி பாராளுமன்ற எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், கொரோனா தொற்று பரவல் காலத்தில் டாஸ்மாக் கடையை மூடியதே தவறு என்று கருத்து தெரிவித்து உள்ளார்… இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்கேட் பகுதியில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது குறித்து பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கார்த்திக் சிதம்பரம்,
“பூரண மதுவிலக்கு கொள்கை முடிவு என்பதே தோல்வி” என்று கருத்து தெரிவித்தவர்,
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபான கடையை மூடியதே தவறு. குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது மதுக்கடையை திறந்திருக்க வேண்டும்.
தமிழக அரசு மதுபானங்களை பணமில்லா வர்த்தகம் மற்றும் ஆன் லைன் மூலம் வர்த்தகம் செய்ய வேண்டும்.”
ஊரடங்கு உத்தரவால் கொரோனா வைரஸ் வீரியத்தை கட்டுபடுத்தலாமே தவிர நோயை கட்டு;fபடுத்த முடியாது.
பொருளாதார வீழ்ச்சியால் தனிநபருக்கோ, தொழில்களுக்கோ ஊக்கத்தொகை, நிவாரணத்தொகை வழங்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டது.
கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி தமிழக சட்ட மன்ற தேர்தலை தள்ளி வைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.