பிரபல இந்தி சினிமா டைரக்டர் அனுதாக் காஷ்யப், சில நண்பர்களுடன் சேர்ந்து பட நிறுவனம் ஆரம்பித்தார்.

நஷ்டம் அடைந்து விட்டதாக கூறி அந்த பட நிறுவனம் மூடப்பட்டது. அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்தது.

இதை அடுத்து கடந்த புதன்கிழமை அன்று அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி உள்ளிட்டோர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த பட நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டாப்ஸி, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளில் குரல் கொடுத்து வந்தார். இதனால் அவரை குறி வைத்து சோதனை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டாப்ஸியின் ஆண் நண்பர் மத்தியாஸ் என்பவர், விளையாட்டு பயிற்சியாளர் ஆவார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டாப்ஸி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

– பா. பாரதி