சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் தான் தற்போதைய திமுக எம்பி ஜெகத்ரட்சகன். இதன்பின், 2009ல் திமுகவில் இணைந்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரானார்.அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 2020ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து வெளிநாட்டில் சட்ட விரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகன் தற்போது இவர் அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக எம்பியாக இருக்கிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, இலங்கை என பல இடங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.  மேலும் , ஹோட்டல், கல்லூரிகள், மருத்துவமனைகள், சாராய ஆலை   என ஏராளமான தொழில்கள் உள்ளன. இவர்மீது ஏராளமான புகார்கள் உள்ள நிலையில், வரி ஏய்ப்பு புகார் காரணமாக,   அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அக்டோபர் 8ந்தேதி  காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின்  வீடு, தியாகராய நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல், ஆழ்வார்கள் ஆய்வு மையம், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனை, ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள ஒரு இடம், ஜெகத்ரட்சகனுக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2020ஆம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக புகார் எழுந்ததால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  ஜெகத்ரட்சகன் வீடு, அலுலவகம், கல்லூரி உளிட்ட பல்வேறு இடங்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் கடந்த 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று 3வது நாளாக சோதன தொடர்கிறது.

இந்த நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் அவரது வீடுகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் ரெய்டு நடைபெறுகிறது. மேலும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.