சென்னை:
முன்னாள் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சென்னை மேயர் துரைசாமியின் மகன் வெற்றிவேல், பிரபல வைரவியாபாரி கீர்த்திலால் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் சேதுராமன் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இப்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரின் சொந்த ஊரான வேம்பார்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் வருவமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ( திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ளது வேம்பார்பட்டி கிராமம்.)
சில மாதங்களுக்கு முன், நத்தம் விஸ்வநாதனின் பினாமியாக கருதப்படும் அவரது நண்பர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றிவேல் வீடு, டாக்டர் சேதுராமனின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் தற்போது சோதனை நடந்து வருகிறது.
Patrikai.com official YouTube Channel