பக்ரித் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு கவர்னர், முதல்வர் தலைவர்கள் வாழ்த்து!

Must read

 
சென்னை:
க்ரித் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிக கவர்னர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
1bakrid1 1bakrid
ஆளுநர் வித்யாசகர்ராவ்
தமிழக ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  ஈகைப்பொருநாளில் விட்டுக்கொடுத்தல், தியாகம், ஒற்றுமை மக்களிடையே வளரட்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா
‘இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் உயரிய எண்ணத்தை பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனே எல்லாம், அவருக்கு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்து, இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கொண்டு, இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களது புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.
ஏழை, எளியோருக்கு உணவளியுங்கள், இனிமையான சொற்களையே பேசுங்கள், உள்ளத்திலிருந்து பகைமையை நீக்குங்கள், பிறரை பற்றி குறை கூறாதீர்கள், தான தர்மம் செய்யுங்கள், தவறிழைப்போரை மன்னித்து விடுங்கள் போன்ற திருக்குரானின் உயரிய போதனைகளை மக்கள் மனதில் நிலை நிறுத்தி உண்மையுடனும், கருணையுடனும் வாழ்ந்தால், உலகில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகெங்கும் இறை உணர்வும், தியாகச் சிந்தனைகளும் பரவட்டும்; அமைதியும், மகிழ்ச்சியும் மலரட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு  ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராமதாஸ்
நபிகளின் போதனைகளை பின்பற்றி அன்பு, அறம், அமைதி சகோதரத்துவம் தழைத்தோங்க பாடுபட வேண்டும் என்றும் ராமதாஸ் தமது வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வைகோ
பக்ரீத் பெருநாளில் மதச்சார்ப்பின்மையை காக்க, சமய நல்லெண்ணத்தை ஊக்குவிக்க உறுதி கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

More articles

Latest article