சென்னை,
ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனை காரணமாக அவருக்கு களத்தை ஏற்படுத்தி விட்டனர் என்று அதிமுக எம்.பி.யும், மக்களவை துணைசபாநாயகருமான தம்பித்துறை வேதனை தெரிவித்து உள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மக்களவை துணைத்தலைவரான தம்பித்துரை கூறியதாவது, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி களங்கம் ஏற்படுத்திவிட்டது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வேதனையோடு தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறினார்.