சென்னை:  அமைச்சர் எம்.பி. சம்பத்துக்கு சொந்தமான சென்னை மற்றும் தருமபுரியில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரிசோதனையில், 9 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. மேலுட்மத, அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் நடத்திவரும் பள்ளி, அதன் தொடர்புடைய நிதி நிறுவனத்திலும் ஐடி சோதனை நடத்தப்பட்டது.

ஏற்கனவே கடலூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தருமபுரியில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறத.

இந்த  சோதனையில் இதுவரை 9 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]