சென்னை: வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை தருகிறார். இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், பெரு நிறுவனங்களில் அவ்வப்போது, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வரும் நிலையில், இன்று சென்னை யானைக்கவுனி, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. இது சம்மந்தப்பட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.