பெங்களூரு,

குஜராத்தில் நடைபெற்ற குதிரை பேரத்தை தொடர்ந்து குஜராத் காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் அழைத்து வரப்பட்டு, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் குஜராத் காங். எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட், அமைச்சர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

குஜராத்தில் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சிக்கு இழுக்க பாரதியஜனதா ஆசைக் காட்டி குதிரை பேரம் நடத்தி வருகிறது. இதையடுத்து இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதாவிற்கு தாவிவிட்டனர்.

இதன்காரணமாக மீதமுள்ள 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜகவிற்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் பெங்களூர் அழைத்து வரப்பட்டு, பெங்களூருல் ஈகிள் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று வருமான வரித்துறையினர் திடீரென  கர்நாடக மாநில காங்கிரஸ் எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டிலும், ரிசார்ட்டிலும் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை மெற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்குநெருக்கடியைக் கொடுக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஐடி துறையினர் மூலம் ரெய்டு நடத்தி வருவதாக காங்கிரசார் குற்றம் சாட்டி வருகின்றனர்.