நெல்லை: ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து,  திமுக முன்னாள் சபாநாயகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் தேர்தல் ஆணையம், பூத் சிலிப் வழங்கும் பணியையும், வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியையும் துரித்தப்படுத்தி வருகிறது. அதே வேளையில், தேர்தல் தொடர்பான புகார்கள்மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வாக்குக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த புகாரின் பேரில், பல இடங்களில் வருமான வரித்துறையினரை கொண்டு சோதனை மேற்கொண்டும் நிலையில், நேற்று மாலை நெல்லையில் வாக்காளருக்கு பணம் கொடுப்பதாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில்,. முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் திமுக கட்சியினர் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் அதிகமான காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

இது குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும், மக்களிடம் எதிர்க்கட்சிகள் மீது தவறான எண்ணத்தை உருவாக்க ஆளும் பாஜக முயற்சி செய்கிறது. அரசு இயந்திரங்களை தவறான நோக்கத்தில் பயன்படுத்துகிறது. இது முதல் முறையல்ல, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், இதே யுக்தியைத்தான் ஆளும் பாஜக அரசு மேற்கொள்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர். இதனால்,  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? நாமக்கல்லில் வருமான வரித்துறையிடம் சிக்கிய ரூ. 4.80 கோடி