தமிழ் சினிமா மீண்டுவர  5 மாதங்கள் ஆகும்’’..
ஊரடங்கால் நொடித்துக் கிடக்கும் துறைகளில் ஒன்று- சினிமா.
தென் இந்தியாவில் மட்டும் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தினம் சோறு போடுவது சினிமாதுறை.
இந்த துறை எப்போது மீளும்?
’’இப்போதைக்குத் தமிழ்த் திரை உலகம் மீண்டுவர வாய்ப்பே இல்லை’’ எனத் தென் இந்தியத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி , திகில் கிளப்பியுள்ளார்.
அவரது பேட்டி இது:
‘’ஊரடங்கு பகுதி நேரமாக விலக்கிக் கொள்ளப்பட்டால், பணியை ஆரம்பிக்கும் கடைசி தொழில்துறையாக, திரைத்துறை இருக்கும்.
ஜூன் மாதம் சிறிய அளவில் ஷுட்டிங் வேலைகளைத் தொடங்கினாலும், தமிழ் சினிமா உலகம் செப்டம்பர் மாத வாக்கில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
ஷுட்டிங்கில் ‘சமூக இடைவெளியை’ கடைப்பிடிப்பது  சாத்தியமே இல்லாத விஷயம். கதாநாயகனும், கதாநாயகியும் நெருக்கமாகத்தான்  இருக்க  முடியும். அதுபோல், இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் இணைந்து இருந்தே பணியாற்ற வேண்டும்.’’ என்று கூறிய, செல்வமணி , ‘’தியேட்டருக்கு மக்கள் வருவார்களா?’’ என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது.’என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
‘’ தியேட்டரில் சினிமா பார்க்க எப்படியும் முன்னணி நடிகர்களின்  ரசிகர்கள் வருவார்கள். ஆனால் குடும்பங்கள் வருமா என்று தெரியவில்லை” என்று சோகத்துடன் சொல்கிறார், பெப்சி தலைவர் .
– ஏழுமலை வெங்கடேசன்