சென்னை: 
மிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச் செய்திகள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவல் அதிகரித்து வருகிறது.   தற்போது தினசரி பாதிப்பு 1,700 ஐ தாண்டி உள்ளது.  மேலும் விரைவில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதையொட்டி தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரமாக்கி உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று மூன்றாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் காலை முதல் தொடங்கி உள்ளன.  ஏற்கனவே முதல் கட்ட முகாமில் 28 லட்சம் பேருக்கும் இரண்டாம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இன்று காலை தொடங்கி உள்ள 3 ஆம் கட்ட மாபெரும் முகாம் இன்று மாலை 7 மணி வரை நடைபெற உள்ளன.
தமிழகம் முழுவதும் சுமார் 20000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இன்று சுமார் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் 1600 முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தடுப்பூசி முகாம்களில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.