டோக்கியோ: கொரோனா தாக்கம் குறையாத பட்சத்தில், ஜப்பானில் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், அடுத்தாண்டும் நடப்பது சந்தேகமே! என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அந்நாட்டு ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி பேசியுள்ளதாவது, “தற்போதைய கொரோனா தாக்கம் அப்படியே தொடரும் பட்சத்தில், அடுத்த 2021ம் ஆண்டும்கூட, ஒலிம்பிக் போட்டியை நடத்துவது சந்தேகம்தான்.
ஆனால், ஒலிம்பிக்கை மீண்டுமொருமுறை ஒத்திவைக்க முடியாது; மாறாக, அது ரத்துசெய்யப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகிகள் கூறியுள்ளது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க இயலாது.
தற்போதைய சூழல், அப்படியே இன்னும் ஓராண்டிற்கு தொடரும் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம், ஒலிம்பிக் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். மனித இனம் கொரோனாவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்பதே நமது இலக்கு” என்றுள்ளார் அவர்.