சென்னை:
தேர்வு மையத்தில் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 6ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்குகிறது.

இந்த நிலையில் பொதுத் தேர்வு மையத்தில் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுபாடுகள்:

  • தேர்வு எழுதும் போது கட்டாயம் மாணவ மாணவிகள் முக கவசம் அணிய வேண்டும்.
  • அனைத்து தேர்வு மையங்களிலும் மின்தடை இருக்கக்கூடாது.
  • தேர்வு மையத்தில் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டிற்கு தேர்வெழுத தடை
  • ஆள் மாறாட்டம் செய்தால் தேர்வெழுத வாழ்நாள் தடை