நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறித்து பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதில், பெரும்பாலானோர் கூறுவது, அவர் பாரதீய ஜனதாவின் ‘பி’ டீம் என்பதுதான். ஏனெனில், அதற்கேற்பத்தான் அனைத்தும் நடந்து வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டின் ஒரு மூத்தப் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் பார்வையாளர் கூறுவதாவது, “தேர்தலில் ரஜினிக்கு விழும் வாக்குகள், நிச்சயம் திமுக அணிக்கு செல்லக்கூடிய வாக்குகளாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ரஜினியின் அரசியலும், திமுகவின் அரசியலும் எதிரெதிர் துருவத்தைச் சேர்ந்தவை.

அந்தவகையில் பார்க்கும்போது, ரஜினி தனி அணியாகப் போட்டியிட்டால், அவருக்கு விழும் வாக்குகள் அதிமுக மற்றும் பாரதீய ஜனதாவின் வாக்குகளாகத்தான் இருக்கும். அவர், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டாலும், அதனால், திமுக அணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அது, எப்படிப்பார்த்தாலும் பாரதீய ஜனதாவுக்குத்தான் பாதிப்பாக முடியும்.

எனவே, ரஜினியின் தனிக்கட்சி அறிவிப்பை திமுகவின் திட்டம் என்றும் கூறலாம். அதாவது, இந்தவகையில், ரஜினியை, திமுகவின் பி-டீம் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று ஒரேபோடாக போட்டுள்ளார்.

இதுவும் கேட்பதற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..!